எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
நன்றி ராஜா…… நன்றி ராஜா…..
1.
தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன் – எத்தனை
2.
பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடைக் கட்டினீர் – எத்தனை
3.
பாவத்தினாலே மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர் – எத்தனை
4.
எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர் – எத்தனை
5.
கரங்களை பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர் – எத்தனை
6.
பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர் – எத்தனை
7.
முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்துவிட்டீர் – எத்தனை
8.
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா – எத்தனை